MARKETS

அக்டோபர் 17, 2008

Disclaimer

Filed under: dailyposts — krvijayganesh @ 8:12 பிற்பகல்
       The Calls/chart patterns made herein are for informational purpose and are not recommendations to any person to buy or sell any securities. The below calls/chart patterns are based on the theory of technical analysis. The author does not accept any liability for the use of this column. Readers of this column those who buy or sell securities based on the information in this column are solely responsible for their actions. The author may have positions in any of the stocks mentioned in this column.
இந்த தகவல்கள் அனைத்தும் சந்தையின் போக்குகளை கற்பிக்கும் நோக்குடன் மட்டுமே வழங்கப்படுகிறது.. எனவே உங்கள் வர்த்தக முடிவுகளை நன்கு தீர ஆராய்ந்து எடுங்கள்.

ஜூலை 27, 2009

New site

Filed under: Daily posts — krvijayganesh @ 12:00 மு.பகல்

இன்று முதல் பதிவுகளும் தகவல்களும் என்னுடைய மற்றொரு தளமான http://www.krvijayganesh.blogspot.com ல் பதிவிடப்படும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

ஜூலை 24, 2009

24-07-2009

Filed under: Daily posts — krvijayganesh @ 12:01 மு.பகல்

24-07-2009-intra

வெள்ளிகிழமை மௌன விரதம் இருந்துடலாம் போலிருக்கு ..
 இன்றைய சந்தை பற்றி சொல்வதற்கு ஏதும் முக்கியமாக தோன்றவில்லை..
சந்தை இன்னமும் காளைகளின் கட்டுபாட்டில் .. 
FORK ன் ஏதேனும் ஒரு நிலை BREAK  OR  BREACH  ஆகும் வரை .. DAY  சார்டினை பதிவிடலாம் என எண்ணி இருக்கிறேன்..

 

4422 – 4487 - 4522 - 4558 – 4620 – 4675
24-07-2009-day

ஜூலை 23, 2009

23-07-2009

Filed under: Daily posts — krvijayganesh @ 12:00 மு.பகல்

23-07-2009

4569 NFல் ஆரம்பித்த செல்லிங் பிரஷர் இந்த அளவிற்கு இறங்கும் என நினைக்கவில்லை.
எதிர்பார்த்த சரிவு பலருக்கும் கிடைத்தது.  :)            
  இனி அடுத்து ??
DAY  சார்டின் தாங்கு நிலையை தகர்த்து நிற்கும் சந்தைக்கு 4303 நிலை சிறிது ஓய்வு அளிக்கும்.
இந்த நிலைக்கு விழும் அளவிற்கு சந்தை இன்னமும் வலுவிழக்கவில்லை என்றே தோணுகிறது..
இன்றைய சந்தையில் துவக்கத்தில் 4389 நிலை ::
உடைபடாமல் இருந்தால்.. 4424  -  4458  –  4491  -  4558  -  4602  இந்த நிலைகளையும் ..
உடைபடும் பட்சத்தில் .. 4365  -  4328  –  4305   நிலைகளும் .. திசையினை தீர்மானிக்கும்.

ஜூலை 22, 2009

22-07-2009

Filed under: Daily posts — krvijayganesh @ 12:00 மு.பகல்
ஷ்ஷ்ஷ்ஷ்…. Expiry Week  நினைச்சா இப்பவே கண்ண கட்டுதே!!
DAY  சார்டின் MEDIAN LINE  லைன் உடைபடவில்லை..  INTRA விற்கு உபயோகிக்கும் சார்ட்டும் இன்று BUY சிக்னலில்..
 இப்பதிவை எழுதும் பொழுது அமெரிக்க சந்தை உயர்வுகளை தக்க வைக்க இயலாமல் திணறி கொண்டிருக்கிறது..

22-07-2009-5

                                                           5Mins chart             

                                                4558 – 4522 – 4475 – 4461 - 4442 - 4393 – 4327
மேல் உள்ள நிலைகளில் 4558  மீண்டும் – மீண்டும் முக்கியமாக கருதுகிறேன்.
காரணம் அந்த நிலையில் BOLLINGER BANDன் UPPER BAND உள்ளது ( 4555 – 65 )..
அந்நிலையில் SELLING பிரஷர் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. ( சரிவு ஏற்பட்டால் — MEDIAN LINE ??  :( :( )
 
கீழ் நிலைகளில் 4440  —  FULL MEALS  சாப்பிட்டு தெம்பாக உள்ளது.  அந்நிலைக்கு கீழ் சந்தை  முடியாத வரை  கிரகணம் சந்தையை பிடிக்காது :) :) :)

22-07-2009-day

                                                                  DAY chart

ஜூலை 21, 2009

21-07-2009

Filed under: Daily posts — krvijayganesh @ 12:20 மு.பகல்
நேற்று நமது சந்தை உச்சகட்ட தடுப்பு நிலை 4499 கடந்து முடிவு பெற்றதும்.. அடுத்த நிலைகளை தேடலாம் என சில புள்ளிகளை வைத்து ஆராய்ந்த வேளையில் ..  நம்பமுடியாத அளவு உயர்வு ஒன்று மீதி இருப்பதை சுட்டிகாட்டியது..
 அந்த சார்டினை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
21-07-2009
                                                                 DAY chart
மேலே உள்ள DAY சார்டின் படி .. தடுப்பு நிலையாக 4950 முதல் 4980 வரை உள்ளது.  இது சாத்தியம் தானா என்று உறுதியாக கூற இயலாது. இருபினும் இந்த சார்ட் படி தாங்கு நிலையாக 4430-40 உள்ளது. இந்த நிலைகள்உடைபடாமல் இருக்கும் பட்சத்தில் மேல் கூறிய 4950-80 வரலாம்.
இனி இன்றைய சந்தை…
 அசாத்திய உயர்வுகள் ஒரு பக்கம் இருக்க .. இதனை நம்பும் மனம் இக்கணத்தில் யாருக்குமே இருக்காது. மார்கெட்டின் FLASHBACK  அப்படி :)   :)
 
4558 – 4509 – 4472 -  4432 – 4397 – 4325
தற்பொழுது உள்ள சூழ்நிலையில்     4558 – 4440     இந்த நிலைகளில் கவனம் தேவை ..      4558க்கு மேல் சமீபத்திய   உயர்வுகளை வரும் நாட்களில் எட்டிடலாம்
குறிப்பு ::
மேலே கூறிய சார்டின் நிலைகளை பரிட்சையாகவே எடுத்துள்ளேன்..  என்வரைல் காளைகளுக்கு கடைசி தாங்குநிலையாக 4430-40 திகழும். அதற்கு கீழ் சந்தைமுடிவுபெறும் பட்சத்தில் இந்த FORK காலாவதி ஆகிவிடும்.

ஜூலை 20, 2009

20-07-2009

Filed under: Daily posts — krvijayganesh @ 12:25 மு.பகல்
கிட்டதட்ட 150 புள்ளிகள் உயர்விற்கு பின் துவங்கும் சந்தை..  
TCS நிறுவனத்தின் கால் ஆண்டு அறிக்கை எதிர்பார்பை விட நல்லதாக உள்ளது.
 அமெரிக்க சந்தை ஆர்பாட்டம் இல்லாமல் முடிந்துள்ளது.. இனி இன்றைய நிலைகள்…
4499 – 4446 – 4395 - 4364 - 4328 – 4237 – 4209
20-7-09-1
 FORK இன் தடுப்பு நிலைக்கு இன்னும் 100 புள்ளிகள் தான் மிச்சம் .. அனால் அது அடைவதற்கு சந்தை பெரும் பாடுபடும் என்றே தோணுகிறது , காரணம் கடந்த வாரத்தின் உயர்வுகள் ..
  இன்று Volatile ஆக அமைந்தாலும் 4350 நிலைகளை தக்க வைக்க முயற்சிக்கும் ..அதற்கு கீழ் செல்லும் நிலையில் சந்தை வலுவிழக்கும் வாய்ப்புகள் உள்ளது.

ஜூலை 17, 2009

17-07-2009

Filed under: dailyposts — krvijayganesh @ 12:00 மு.பகல்
17-9-09-2

                                                                               5 Mins chart

நேற்று நம் சந்தையில் 4325 நிலை திருப்புமுனையாக இருக்கும் என நினைத்தேன் .. மாறாக SGX- NIFTY இன் HIGH 4325.50 என பதிவாகிஇருந்தது  .
 மேலும் நேற்று கொடுத்த சார்டின் MEDIAN LINE உடைபடாமல் இருப்பது காளைகளுக்கு நம்பிக்கை தரும்.
 இன்று 4190-4205 நிலைகள் வெகு முக்கிய தாங்குநிலையாக திகழும்.
 இந்த குறிபிட்ட புள்ளிகளில் 4 மணி நேர சார்ட்டில் EMA28, SMA103 மற்றும் MEDIAN LINE உள்ளது. மேலும் EMA – SMA CROSSOVER நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது .. ஆக இந்த நிலைக்கு கீழ் சந்தை முடிவாகும் பட்சத்தில் கரடிகளின் கை ஒங்க ஆரம்பிக்கலாம்.
 அவ்வாறு நடைபெறாவேனில் 4490 – 4500  சாத்தியமாகும்   .
                         4090 – 4169 – 4200 – 4233 – 4266 – 4325

 

17-9-09-4

                                                                    4  Hour chart

ஜூலை 16, 2009

16-07-2009

Filed under: dailyposts — krvijayganesh @ 12:24 மு.பகல்

16-07-2009

 

நேற்றைய தினம் பற்றி ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் ” EMA 28 “
 கடைசி நிமிடம் வரைலும் அந்த கோடினை விட்டு கீழே இறங்கவில்லை..
இன்றைய சந்தை – 4325 நிலையில் சற்று கவனமாக இருங்கள்.. மற்றபடி 4206 நிலை உடையாத வரை பெரும் அளவில் சரிவு இருக்காது.
 FORK இன் தடுப்பு நிலை இப்பொழுது 4496 இல் உள்ளது .. அதனை  அடைவது சர்வதேச சந்தைகளின் கையில் தான் உள்ளது ..
4496 – 4412 – 4325 - 4246 -4206- 4183 – 4135

ஜூலை 15, 2009

15-07-2009

Filed under: dailyposts — krvijayganesh @ 2:04 மு.பகல்

15-9-09post

 

4262 – 4237 – 4192 - 4130 - 4085 – 4051 – 3965
 என்னுடைய FORK படி ..Median line 3965 நிலைல் உள்ளது .. மற்ற இன்டிகேடர் வலுவுடன் காணபடுவதால் 4130 நிலைனை தடுப்பு நிலையாக வைத்திருக்கிறேன்.
 PRE MARKET analysis கூறுவதில் எனக்கு இது முதல் அனுபவம். இந்த நிலைகளை நன்கு ஆராய்ந்த பின்னரே எடுத்து கொள்ளவும்..

ஜூலை 7, 2009

ANDREW’S PITCH FORK

Filed under: dailyposts, INDICATORS — krvijayganesh @ 1:57 பிற்பகல்

நாம் சாப்பிட உபயோகிக்கும் முள்கரண்டியைத்தான் PITCHFORK என்கின்றனர். இதன் மூன்று முட்களை நினைவில் வைத்துக் கொண்டு இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.

வெறும் மூன்று  நிலைகள்(levels)  கொண்டு சந்தைஇன் நகர்வுகளை கணிக்கும் யுக்தி இது..

 இதை உபயோகிக்க நமக்கு தேவை 

1. Low level – High level – Low level

 2. High level – Low level – High level

இந்த இரண்டு வகையில் எந்த லெவல் நமக்கு சமீபத்தைய  சார்ட்டில் கிடைகிறதோ .. அதன்படி வரையபடுகிறது..

 

 படம்-1 இல் .. High-Low-High லெவல்களில் FORK வரைந்துள்ளேன் ..

 நாம் செய்ய வேண்டியதேல்லாம் மூன்று புள்ளிகளை அடையாளம் காட்டுவது தான் .. FORK தானாகவே வரைந்து விடும்.

 படம்-1 படி .. நீல நிற கோடுகள் கீழ் நோக்கி பயணிக்கிறது .. அதன் முடிவு என்ன என்பதை அடுத்த படத்தில்(படம்-2 ) காணவும் .. கீழ் நோக்கி சென்ற போர்க் கோடுகளில் .. மேலே உள்ள கோடு ரெசிஸ்டன்ஸ்(RESISTANCE) ஆகும் .. அடுத்த கோடு ( நடு கோடு ) மிடியன் லைன்(MEDIAN LINE) எனப்படும் .. கடைசியாக உள்ள கோடு சப்போர்ட்(SUPPORT LINE) ஆகும் ..

blogpost-high-low-high-1

 முதல் படத்தில் சந்தை கீழே செல்லும் வாய்ப்பினை நமக்கு காட்டியது .. இரண்டாம் படத்தில் சந்தை எது வரை கீழே செல்லும் என்பதை காட்டுகிறது .. அதாவது சந்தைஇன் முதல் இலக்கு நடு கோடான மிடியன் லைன் தான் ..

 மிடியன் லயனில் சந்தை தற்காலிக நிறுத்தம் காண்பதையும் .. அதன் பின் மீண்டும் சரியாய் துவங்குவதும் காணலாம் .. போர்க் படி நம்முடைய இலக்கு மிடியன் லைன் ..

 அதே சமயம் ஸ்டாப் லாஸ் மேலே உள்ள ரெசிஸ்டன்ஸ் லைன் ஆகும்.. ஒரு வேளை .. சந்தை மேல் கோடினை உடைடிருந்தால் .. நம்முடைய சார்ட் பொசிசன் கவர் செய்வது அவசியமாகிறது ..

blogpost-high-low-high-2

 மிடியன் லைனிற்கு கீழே சென்றவுடன் நமது ஸ்டாப் லாஸ் மிடியன் லைன் ஆகும்.. சப்போர்ட் லைன் இலக்காக கொண்டு .. மிடியன் லைன் ஸ்டாப் லாஸ் ஆக வைத்து கொள்ளலாம்(WITH STOPLOSS AS MEDIANLINE — TRGT SUPPORT LINE) ..

 

 அடுத்த படத்தில் Low – High -Low படி வரைந்துள்ளேன் .. இதன் படி .. போர்க் மேல் நோக்கி செல்கிறது..

 நாம் வரைந்த போர்கில் சப்போர்ட் லைநினை ஒரு முறை தொட்டு .. பின் சந்தை அதன் மேல் நோக்கிய பயணத்தை துவங்குகிறது ..

blogpost-low-high-low-1

 சப்போர்ட் லைன் உடை பட்டிருந்தால் நமது லாங் பொசிசன் மூடும் கட்டாயத்தில் இருந்திருப்போம் ..

 சப்போர்ட் லைன் உடைபடாததால் .. நம்முடைய முதல் இலக்கு மிடியன் லைன் ஆகும் ..

 முன்பு கூறியது போல் .. மிடியன் லைனிற்கு மேல் சென்றதும் .. நமது ஸ்டாப் லாஸ் மிடியன் லைன் ஆக வைக்க வேண்டும் ..

blogpost-low-high-low-2

 

PITCH FORK பற்றிய லிங்க் ஒன்றினை இந்த பதிவில் இணைத்துள்ளேன் .. உபயோகித்து கொள்ளுங்கள்..

http://www.youtube.com/watch?gl=IN&hl=en-GB&v=VTtqsmCqMhQ

குறிப்பு :              LOW-HIGH-LOW அல்லது HIGH-LOW-HIGH என்று எந்த வகையில் நீங்கள் தேர்வதாக இருபினும் .. கடைசியாக உள்ள LOW(அல்லது) HIGH  இல் இருந்து ஒன்றிறந்து CANDLE மேலே சென்ற பின் வரையவும்.

அதே போல் .. போர்க் ரெசிஸ்டன்ஸ் அல்லது சப்போர்ட் உடைபடும் பொழுது .. வரையபட்ட FORK காலாவதி ஆகிறது.. .. அடுத்த இலக்கை நிர்ணயிக்க புதிய FORK வரைய வேண்டும்.

மற்றவை அடுத்த பதிவில் ……………..

ஜூலை 4, 2009

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

Filed under: dailyposts, INDICATORS — krvijayganesh @ 1:49 மு.பகல்

எங்கள் குருவின் பிறந்தநாள் இன்று என்று சொல்வதை விட வாழ்க்கை நெறியினை
கற்று கொடுத்து ..இன்றும் சாமானியனாக தன்னை பாவித்து  பல பேரின் உணர்ச்சிகளை புரிந்து அவர்களின் ஆற்றலை வெளி கொண்டு வந்த ஒரு மாமனிதரின் பிறந்த நாள்.

 

நினைக்கவே வியப்பூட்டும் நாட்கள்.. தொலைக்காட்சி பெட்டியில் பங்குச்சந்தை பற்றிய நிகழ்ச்சிகள்  பார்த்து் — வாங்கிய பங்குகளின் மூலம் லாபம் கிட்டுமா என்ற குழப்பத்தோடு உறங்கிய இரவுகள் .. தினவர்த்தகத்தில் சல்லி காசு சம்பாதிக்க கூட நமக்கு துப்பில்லையா என எண்ணிய நாட்கள் .. சந்தையில் மற்றவர்களுக்கு மட்டும் எப்படி அதிர்ஷ்டம் அடிக்கிறது என வியந்த பொழுதுகள் .. இதை விட கொடுமை — நான் வாங்கிய பங்கின் விலை ஏற வேண்டும் என எந்த விதமான நுட்ப குறியீடுகள்  பார்க்காமல் ஒரு குருடனாக வாழ்ந்த காலங்கள்….

இவை அனைத்திற்கும் விடையாய் அமைந்து என் (எங்கள்) வாழ்வில் ஒளிச்சுடர் ஏற்றிய பெருமை அவருக்கு மட்டுமே .

.
குருவை ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட ரூபத்தில், ஒரு குறிப்பிட்ட அடையாளத்தில் கண்டுகொள்ள முடியாது என்பார்கள் .. அவ்வாறு தான் எனக்கும் ..
இன்று வரையில் நான் அவரை பார்த்ததில்லை , அவருடைய தொலைபேசி எண் இருந்தும் அழைக்க மிரளும் விரல்கள், எங்களுக்கு பாலமாக இருப்பதெல்லாம் யாஹு தான் ..விஞ்ஞானம் மனிதனிற்கு  எந்த அளவிற்கு உதவுகிறது என இப்பொழுது தான் உணர்கிறேன்  ..

வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்தவரையே குரு என்று கொண்டாடிக் கொண்டிருக்கிற பொழுது வாழ்கையில் பயணிக்க தேவையான பணத்தினை சம்பாதிக்க கற்று கொடுத்தவரை  குரு என அழைக்காமல் என்னவென அழைப்பது ??

 
குரு என்பவரால் மட்டுமே உங்களை உங்களுக்குள் தள்ள முடியும்
அவ்வாறு தான் எங்களுக்கும் .. அடுத்த நொடி என்ன நடக்கும் என பயந்த காலங்கள் மாறி .. இது தான் நடக்கும் – சந்தை இப்பொழுது இந்த பக்கம் தான் பயணிக்கும் என உறுதியிட்டு கூறும் பக்குவத்தினை எங்களுக்குள் புகுத்தியவர்..

 நுட்பங்களின் படி வர்த்தகம் செய்வது முதல் .. பலதரப்பட்ட விஷயங்களிலும் ஆறுதலும்  அறிவுரைகளும் அளித்து எண்களின்  தன்னம்பிகையை  சிறிதளவும்  சரியாமல்  பார்த்து  கொள்பவர்  ..

 
அது சரி .. குருவின் பிறந்த நாளிற்கு விருந்து வேணாமா ??
 இதோ உங்களுக்காக 
 கீழே உள்ள சார்ட்டில்     EMA 28 , SMA103      என்ற செட்டப் உபயோகிதுள்ளேன்.. கடந்த ஆறு மாத  காலங்கள நான் உபயோகித்த செட்டப் இது .. மிகவும் துல்லியமாக சிக்னல் கொடுத்த செட்டப் இது ..

4-7-09

 இதில் உள்ள MACD( 16,17,13)  & STS ( 36,8,21)    மதிப்புகள் ஏற்கனவே நாம்  STOCHASTIC  பதிவில் பார்த்தவை தான் .. EMA  மற்றும் SMA தான் மாறி உள்ளது ..

சந்தை  EMAஅல்லது SMA  என ஒரு கோடில்  தான் சப்போர்ட் அல்லது ரெசிஸ்டன்ஸ் பிடிக்கும் .. ஆக இந்த கோடுகளை நன்கு கவனித்திர்களானால் TARGET மற்றும் STOPLOSS ஆகியவற்றை கணக்கிடுவது சுலபமாகும்..

எல்லா வளங்களும் பெற்று
எவ்வித நோய் நொடியுமின்றி பல்லாண்டுகள் வாழவேண்டுமென உளமார வாழ்த்தி  இந்த பதிவினை என் (எங்கள்) குருவிற்கு சமர்பிக்கிறேன் !!

December 27, 2008

STOCHASTIC

Filed under: dailyposts, INDICATORS — krvijayganesh @ 5:51 பிற்பகல்

பங்குவணிகம் வலைபூ முலமாக சந்தைக்கு அறிமுகமாகி .. இன்று பல விஷயங்கள் கற்றதற்கு  மட்டுமல்லாமல் , பல புதிய நண்பர்களையும் எனக்கு தந்த எனது குருவிற்கு நன்றிகள் கோடி !!!

இந்த பதிவில் .. STOCHASTIC ( STS) என்கின்ற இன்டிகேடர்  இணைத்துள்ளேன்.. அதன் மதிப்புகளை கீழே கொடுத்துளேன்..
36 , 8 , 21
இந்த இன்டிகேடர்க்கு உண்டான முக்கிய விதியினை பற்றி முதலில் கூறிவிடுகிறேன் ..
STS – இதன் சார்ட்டில் 0,20,40,60,80,100 என்கிற எண்கள் இருக்கும் ..

 0 – 20 .. இந்த RANGEஇல் (OVER SOLD REGION)  கோடுகள் உலவும் பட்சதில் அந்த பங்கின் விலை சரிவினையோ அல்லது பக்கவாட்டிலோ டிரேடு  ஆகும்.. ஆக ஷர்ட் பொசிஷனில் உள்ளவர்கள் 20 கோடினை தங்களாடு சப்போர்ட் ஆக வைத்து காத்திருக்கலாம்..

80-100 .. இந்த RANGEஇல் (OVER BOUGHT REGION) கோடுகள் உலவும் பட்சதில்  அந்த பங்கின் விலை உயர்வினையோ அல்லது பக்கவாட்டிலோ செல்லும் .. லாங் பொசிஷனில் உள்ளவர்கள் 80  கோடினை உடைந்து கீழே வராதவரை காத்திருக்கலாம்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள சார்ட்டில் EMA17 , SMA47 செட்டப் அப்பளை செய்துள்ளேன்..
இதில் MACD மதிப்புகளும்  மாறி உள்ளது அவைகளையும் குறித்து கொள்ளுங்கள் ..
16 , 17 , 13
இது 5 நிமிட டைம் பிரமில் உள்ளது
தினவர்த்தகட்டிற்கு இது மிகவும் பயன் தரும்.. 

 

sts-post1காலையில் சுமார் 10.25 மணிக்கு STSஇல் உள்ள நீல கோடு -  80 கோட்டிற்கு மேலே சென்று உள்ளது .. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சந்தை  1. மேலே செல்லவேண்டும் அல்லது 2. பக்கவாட்டில் செல்லவேண்டும் ..  சந்தையின் போக்கினை பார்த்தல் பக்கவாட்டில் தான் சென்றுள்ளது .. காரணம்.. .. MACD சரிய துவங்கி விட்டது .. ஆக இது வாங்குவதற்கு உகந்த தருணம் அல்ல .. அதே போல் செல்(SELL)  சிக்னலும் கிடைக்க வில்லை .. எனவே ஏதேனும் ஒரு தெளிவான சிக்னல் கிடைக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.. 

சார்ட்டில் மதியம் 12.15 மணிக்கு STS இன்டிகேடர் 80 கோடில் இருந்து உடைபட்டு  கீழே இறங்குகிறது .. அங்கிருந்து சந்தையும் சரிய துவங்கிவிட்டது .. மேலும் MACD நமக்கு சரிவினையே உறுதி செய்கிறது .. 1.10 மணி அளவில் STS இல் உள்ள நீல கோடு 20 கோட்டிற்கு கீழே சென்றுவிட்டது .. அதன் பிறகு சந்தையில்  நடந்திருப்பதை காணுங்கள்.. சரிவுமட்டுமே நடந்துள்ளது .. சிறிய-சிறிய ஏற்றங்கள் இருந்தாலும் , 20 கோடினை உடைத்து மேலே செல்லாத வரை இந்த சரிவுகள் நீளும் அல்லது பக்கவாட்டில் சென்றிருக்கவேண்டும்  .. அதனையே இந்த சார்ட்டும் கூறுகிறது ..
இவைகளையும் உங்களது செட்டப் உடன் இணைத்து பயின்று பாருங்கள்  ..

 2009 ஆம் ஆண்டு நமக்கு புதிய நம்பிக்கையும்-  இன்னும் பல விஷயங்களை கற்று கொள்ளும் சந்தர்ப்பமும் .. கற்றதன் மூலம் லாபமும் கிடைக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ..
உங்கள் ஆசிஉடன் விடை பெறுகிறேன் .. நன்றி !!!

December 9, 2008

துணுக்கு பதிவு

Filed under: dailyposts — krvijayganesh @ 3:26 பிற்பகல்

உங்களை அதிக நாட்கள் காத்திருக்க விட்டதற்கு மன்னிக்கவும் ..

நல்ல விதமாக  ஒரு திருமணம் நடந்து முடிந்தது .. மற்றொன்று பிப்ரவரி மாதத்தில் தான்..  அது வரை கலக்கிடலாம் வாங்க ..

சார்ட் சரியாக தெரிய வில்லை என பின்னோட்டம் வந்துள்ளது .. நானும் இயன்ற வரை சரி செய்ய பார்க்கிறேன்.. இருப்பினும் முடியவில்லை .. என்னோட அறிவுக்கு எட்டாத விஷயத்திற்காக நேரதினை செலவு செய்வதை விட .. அதில் நான் கூற வந்த கருத்தினை இங்கு தெளிவுபடுதிவிடுகிறேன்..

QUOTETRACKERஅல்லது ICHARTS என எதனை உபயோகித்தாலும்  அதில் நீங்களே TIMEFRAMEமாற்றி வைத்து பாருங்கள் ..

  குறுகிய மற்றும் நெடு  TIMEFRAMEமிற்கு உள்ள வித்தியாசம் உங்களுக்கே தெரிந்து விடும்  .. அது ஒன்னும் கம்ப சூத்ரம் அல்ல ..


1 நிமிடத்தில் வெகு விரைவாக்த செயல் படும் இன்டிகேடர் ..

மூன்று நிமிடத்தில் கொஞ்சம் தாமதமாகும் ..

அதே 15நிமிடத்தில் இன்னும் தாமதமானாலும் – அதின் போக்கு வலுவாக இருக்கும் .. விஷயம் இவ்வளவு தான் ..
நேரம் அதிகமாக வைக்கும் பட்சத்தில் போக்கு தெளிவாக
தென்படும் .. பத்து நிமிட மற்றும் பதினைந்து நிமிட டைம் பிரம் தின வர்த்தகத்திற்கு நன்கு அமையும் ..

 இதில் அவ்வளவு  சீக்கிரம் EMA,SMAகோடுகள் மாறாது.. கூடவே  MACD  இன்டிகேடரும் உபயோகியுங்கள் .. முழு நம்பிக்கையுடன் வர்த்தகம் புரியலாம்..

வலது பக்கதில் CHARTPATTERNS பற்றிய லிங்க் ஒன்றினை கொடுத்துள்ளேன் .. ஓய்வு நேரத்தில் அதனை காணவும் ..

மற்றவை அடுத்த பதிவில் சொல்கிறேன் ..

நவம்பர் 23, 2008

TIMEFRAME

Filed under: dailyposts, INDICATORS — krvijayganesh @ 5:30 பிற்பகல்

LADIES & GENTLEMEN ..
(வணக்கம்னு எத்தனை நாளுக்கு சொல்றது ..அதான் இப்படி)

நண்பர்கள் சிலரது  மின்னஞ்சல், வர்த்தகம் செய்வதில் சில சந்தேகம்  இருப்பதாக  கூறி உள்ளனர் .. ஆனால் அதை பற்றிய விவரங்கள் தரவில்லை .. தயவு கூர்ந்து தங்களின் சந்தேகங்களை விவரமாக கூறவும் .. அப்போது தான் எங்களால் அதனை பற்றிய தெளிவான பதில் கூற முடியும்..

எனக்கு தெரிந்த வரையில் .. சில நேரங்களில் செட் அப் உபயோகிக்கும் பொழுது EMA/SMAகோடுகள் வெகு விரைவாக மேலும்/கீழும் செல்வது  போல் இருக்கும்.. அது மாதிரியான சமயங்களில் எங்கு நுழைவது , எங்கு வெளியேறுவது என குழப்பமாக  இருக்கலாம்  .. இது செட் அப்பில் உள்ள தவறு அல்ல .. நாம் உபயோகிக்கும் TIMEFRAME   காரணமாக   இருக்கலாம்   ..  ..

 

TIMEFRAME – ஒரு CANDLE உருவாக எடுத்து கொள்ளும்

நேரத்தினை குறிக்கிறது .. பச்சை,சிகப்புனு குச்சி மாதிரி

இருக்கே அது தாங்க CANDLE..

 

உதாரணத்திற்கு கீழே சில சார்டினை கொடுத்துள்ளேன்..

 

அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு TIMEFRAMEஇல் உள்ளது ..
1நிமிடம் , 3நிமிடம், 15நிமிடம் கொடுத்துள்ளேன் ..
இதை எல்லாம் முன்னரே கூறி இருக்கலாம்.. முதல் பதிவிலேயே இந்த வலைபூவினை குப்பையில் போட்டிருப்பீர்கள் .. :) :) ..

ஒவ்வொன்றினையும் தனித்தனியாக கூறினால் உங்களுக்கும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்..

 பேப்பர் டிரேடு செய்ய சொன்னதற்கு காரணமும் இதற்காக  தான்.. சில பயிற்சிகள் பல சந்தேகங்களை எழுப்பும் .. அவற்றிற்கு விடை கிடைக்கும் பொழுது இன்னும் நம்பிக்கை அதிகரிக்கும்..

ஆரம்ப காலத்தில் 1நிமிடமும் 3 நிமிடமும் உபயோகியுங்கள்… அவை பழகிய பின்பு அதிக நிமிடங்களை (5mins, 10mins ,15mins,30mins,60mins) உபயோகிக்கலாம்..

இனி சார்ட் பற்றி காண்போம் ..
 இதில் EMA34 & SMA89 செட் அப்பினை அப்பளை செய்துள்ளேன் ..

 

 

1mintimeframe11நிமிட TIMEFRAME இல் .. பல முறை காலையில் இருந்து  EMA34கோடினை தொடுவதினை  காணலாம்..   சுமார் பதினொரு மணிக்கே MACD இன்டிகேடர் நமக்கு SELL சிக்னல் கொடுத்துவிட்டது .. இருப்பினும் சந்தை மேலும் உயர்வினை கண்டுள்ளது ..

 

3mintimeframe

இதே சூழ்நிலையினை 3நிமிட TIMEFRAME இல் காணுங்கள் ..பதினொரு மணி அளவில் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பினும் 12.30 மணி அளவில் தான் டிரெண்டு ரிவேர்சல் ஆகி உள்ளது ..

 

15mintimeframe

இப்பொழுது 15நிமிடTIMEFRAME காணுங்கள் .. காலையில் ஏறிய சந்தை SMA89கோடினை தாண்டவே இல்லை ..  SMA89 கோடினை தொட்டு கீழ் இறங்குகிறது .. வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைய குறைய .. சந்தையும் தனது நிலையில் இருந்து மெல்ல சரிய துவங்குகிறது ..ஒரு கட்டத்தில் .. டிரெண்டு ரிவேர்சல் ஆவதையும் பின்  2 மணி அளவில் விற்பவர்கள் எண்ணிக்கை குறைவதையும், அந்த நிலையில் சந்தை மேல் நோக்கி பயணம் செய்வதையும் கண் கூடாக காணலாம் ..

ஆக ஒரே சந்தை பல கோணங்களில் காணப்படுகின்றது ..

அதிக TIMEFRAME வைத்து பார்க்கும் பொழுது நம்மால் இன்னும் முழு  நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்ய இயலும் .. ஆனால் அதற்கு முன் சில காலம் பயிற்சி அவசியம் .. இல்லையெனில் அதனை புரிந்து கொள்வது கடினம் ..

முடிந்த வரையில் குறைந்த TIMEFRAME சார்டினையும் அவ்வவ்பொழுது ஒப்பிட்டு பாருங்கள் ..அதில் CHART PATTERN வெகு தெளிவாக தெரியும்..

இந்த பதிவினை சற்று அவசரமாக எழுதியுள்ளேன் ..
  ..இதில் சந்தேகம் இருப்பின் தங்களின் சந்தேகத்தினை முழு விவரத்தோடு எனக்கு தெரியபடுத்தவும்..

வரும் நாட்களில் தங்களின் சந்தேகங்களையும் அதற்கு உண்டான பதிலையும் ஒரு தொகுப்பாக எழுதவும் உள்ளேன் ..

உங்களின் சந்தேகங்களுக்காக காத்திருக்கிறேன்…..

நவம்பர் 16, 2008

முதல் முப்பது நிமிடம்

Filed under: dailyposts, INDICATORS — krvijayganesh @ 5:25 மு.பகல்

  வணக்கம் நண்பர்களே ..
இந்த வாரம் முதல் முப்பது நிமிடத்தில் வர்த்தகம் செய்வது பற்றி காண்போம் ..
முந்தைய நாளின் அதிக பட்ச / குறைந்த  பட்ச மற்றும் இறுதி விலையினை எடுத்துக்கொள்ளுங்கள்.. இதற்கு நாம் கணிக்கும் முறையினை கீழே கொடுத்துள்ளேன் ..

 முந்தைய நாளின் அதிகப்பட்ச விலை – குறைந்த பட்ச விலை = தொகை
முந்தைய நாளின் இறுதி விலை + தொகை = வாங்குவதற்கு உகந்த தருணம்
முந்தைய நாளின் இறுதி விலை – தொகை = விற்பதற்கு உகந்த தருணம் ..

உதாரணதிற்கு 12/11/2008 ஆம் நாளின் ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல் விலையினை எடுத்துகொள்வோம் ..

RELIANCE INDUSTRIES LTD
Date             Open       High        Low       Close      Volume      Adj Close*
14-Nov-08 1,189.40 1,195.00 1,087.35 1,150.00 11,272,900 1,150.00
12-Nov-08 1,200.00 1,206.60 1,142.55 1,169.00 8,267,100 1,169.00

RELCAPITAL
Date           Open      High     Low    Close   Volume   Adj Close*
14-Nov-08 620.00 654.40 578.10 583.70 6,426,800 583.70
12-Nov-08 628.00 650.00 590.05 606.00 5,677,000 606.00

இனி ரிலையன்ஸ் விலையினை காணுங்கள் ..
12/11/2008தேதி விலை படி..
 1206.60-1142.55=64.05
1169+64.05=1233.05 தான் நம்முடைய வாங்குவதற்கு உகந்த விலை..
ஆனால் 14/11/2008 தேதி துவக்க விலை 1189.40ஆகும் .. நம் கணக்கு படி இது வாங்கும் நேரம் அல்ல .. சார்டினை கண்டால் உங்களுக்கே புரியும் .. கேப் அப் ஆகா துவங்கியும் தக்க வைக்க இயலவில்லை ..

 

ril-30minstrade

 

அதே போல் ரிலையன்ஸ் கேபிடல் பங்கின் விலையும் பாருங்கள் ..
 650-590.05=59.95+606=665.95 .. இதுவும் வாங்குவதற்கு உகுந்ததாக இல்லை ..

rcap30minstrading

இதில் முக்கியமான விஷயங்கள் இரண்டு ..

 முதலாவதாக .. வாங்குவதற்கு உகுந்ததாக இல்லை என்றால் அது ஷர்ட் செய்யும் நிலையும் அல்ல ..
 நம் கணக்கு படி இரு பங்குகளிலும் முறையே 1104.95 , 546.05 விலைக்கும் கீழே  துவங்கி இருந்தால் தான் அது விற்பதற்கான/ ஷர்ட்  நிலை ..
ஆக  வாங்கும் / விற்கும் நிலையினையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.. 

இரண்டாவது.. இந்த முறை முதல் முப்பது நிமிடத்திற்கு மட்டுமே.. கடைசி முப்பது நிமிடத்திற்கு அல்ல.. முப்பது நிமிடத்திற்குள் அந்த வர்த்தகத்தினை முடித்து விடவேண்டும் ..
 

 சில விஷயங்களை  பகிர்ந்து கொள்ளும் நோக்கொடு இந்த பதிவுகள்  ஆரம்பித்திருந்தாலும் என்னுடைய நோக்கம் ஒன்றே.. நான் பட்ட கஷ்டம் இனி யாரும் பட கூடாது என்பதே ..
நான் கூறுவது ஒன்றே வழி அல்ல .. இவை லட்சத்தில் ஒன்று .. ஏன் கோடியில் ஒன்றாகவும் இருக்கலாம் .. ஆனால் என்னுடைய குரு கற்று கொடுத்தது போல் அனைத்து  முறைகளுக்கும்/ வழிகளுக்கும்  ஒரு குருவினை நாடுவது என்பது சாதரண விஷயம் அல்ல .. அதற்கு அந்த குருவின் ஆசி மிக முக்கியம் ..

பங்கு சந்தை  — இந்த பெயரை கேட்டாலே பல பேர் தெறித்தேளுந்து ஓடுவார்கள் ..   வர்த்தகம் செய்பவர்கள் மேல்வர்க்தத்தினை சேர்தவர்கள், சூதாதுபவர்கள் எனும் எண்ணம் உண்டு ..
இது சூதாட்ட விடுதியோ , கேளிக்கை மையமோ அல்ல ..

 முறையான அணுகுமுறை இருந்தாலே போதும் ஜெயித்துவிடலாம் ..

“முறையான” என்பதற்கு அர்த்தம் என்னனு கேக்கறிங்களா ??

அதற்கு குரு அருளியதில் சிலவற்றை மட்டும் இங்கு சொல்ல கடமை பட்டிருக்கிறேன்..
1. சந்தை கடவுளை போன்றது .. நம்மை விட மிக மிக பெரியது ..
2. நாம் சந்தையினை மதிக்க வேண்டும் ..நேசிக்க வேண்டும் ..
3. நம்முடைய எண்ணதிற்கு சந்தை என்றும் வளைந்து கொடுக்காது ..  நாம் தான் அதன் வழியை பின்பற்ற வேண்டும்..
4. நம்முடைய விருப்பு வெறுப்புகளை விட்டு வெளியே வந்தால் தான்  சந்தையின் உண்மையான போக்கினை உணரமுடியும் .. ( நான்  வாங்குனவுடனே விலை ஏறங்கிடுச்சு னு கவலை பட்டு அர்த்தம் இல்லை .. தவறு நம்மிடத்தில் தான் ஒழிய சந்தையில் அல்ல )
5. சந்தையின் மேல் நம் EGO  பாய கூடாது .. அவ்வாறு பாய்ந்தால்.. நஷ்டம் தான் மிஞ்சுமே ஒழிய லாபம் கிட்டுவது அரிது ..( புள்ளிகள் கேப் டவுன் ஆகிடுச்சு .. இப்ப ஏறிடும் னு நினைச்சு வாங்குறதை விட .. சில நேரம் பொறுத்து சரியான போக்கினை கணித்து செயல் படுவதே உத்தமம் ..)
6. சரிவுகள் சகஜம்தான்….ஆனால் எத்தனை வேகமாய் நம்மை Regroup செய்து கொள்கிறோம் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது..
 
இந்த பதிவினை முடிக்கும் முன் முக்கியமான ஒன்றினையும் கூற வேண்டும் ..
      ” இதுவும் கடந்து போகும் “
 எந்த நிலையிலும் இந்த வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள் ..

உங்கள் ஆசியுடன் இப்போதைக்கு செல்கிறேன் .. மீண்டும் சந்திப்போம்  ..

நவம்பர் 8, 2008

MACD

Filed under: dailyposts, INDICATORS — krvijayganesh @ 5:37 பிற்பகல்

 MACD — Moving Average Convergence Divergence

 
நம் செட் அப் படி டிரேடு செய்யும் பொழுது சில நேரம் நம்மால் போக்கினை கணிக்க முடியாமல் போகிறது .. அந்த குறையை இந்த MACD  இன்டிகேடர் போக்கும் ..
வாங்குபவர் மற்றும் விற்பவர்களின் நடுவே நடக்கும் போரினை நமக்கு காட்டும் இன்டிகேடர் இது.. சுலபமாக யார் ஜெயிக்கபோகிறார்கள் என கண்டுபிடித்து விடலாம்..

இதை பற்றி சொல்ல தான்  இந்த பில்டப் கொடுத்தியானு கேக்கறிங்களா ..
விஷயம் அது இல்லைங்க .. நாங்க இதுல சில மதீப்பீடுகள உபயோகிக்கிறோம்.. அதனை உங்களிடம் பரிந்துரைக்கும் முன் சில – பல பரீட்சைகள்  செய்து திருப்தி அடைந்த பின்பே இங்கு வெளிஇடுகிறோம் ..

எங்கள் மதிப்புகள் பல சாதகமான முடிவுகளை கொடுத்துள்ளது.. டெக்னிகல் வேலை செய்யாத சமயங்களில் கூட ஓரளவு சந்தையின் போக்கினை இதன் மூலம் யோசித்துவிடலாம் ..

 

 நீங்கள் காணும் சார்ட்டில் EMA17 & SMA47 செட் அப் அப்ளை செய்து , MACD இன்டிகேடர் கொடுத்துள்ளேன் .. இது பத்து நிமிட டைம் பிரேமில்(10 MINS TIMEFRAME) உள்ளது .. இதில் கீழ் காணும் VALUES களை உபயோகித்துள்ளேன்..

26 , 44 , 89

செட் அப் நமக்கு காட்டும் திசையும்  .. இன்டிகேடர் காட்டும் போக்கும் ஒரு சேர அமைந்து விட்டால்.. கண்டிப்பாக அடுத்து நிகழவிருக்கும் உயர்வு / தாழ்வினை கணித்துவிடலாம் ..
உதாரணதிற்கு .. காலையில் இருந்து சந்தை மந்தமாக இருந்தாலும் .. விற்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதை காணலாம் ..ஒரு பக்கம் விற்பவர்கள் எண்ணிக்கை குறைவதும் .. மறுபக்கம் செட் அப் .. வாங்குவதற்கு உகந்ததாக மாறுவதையும் சார்ட்டில் காணலாம் .. 12.50மணி அளவில் செட் அப் BUY சிக்னல் தருவதும் , 1.10 மணி அளவில் இன்டிகேடர் BUY சிக்னல் தருகிறது.. அது வரை  வழி தெரியாமல் முழிச்சிட்டு இருந்த நிப்டி .. ஏற்றத்தினை காண தயார் ஆகிறது..

macd1

இவ்வாறு காளையின்( BULLS) கையில் இருந்து கரடி(BEARS) பிடுங்கி கொள்வதோ அல்லது கரடியின் வக்கிர பிடியில் இருந்து காளை பறித்துக்கொள்ளும் நேரம் தான் டிரென்ட் ரிவர்சல் ஆகும் ..
ரொம்ப குழப்புறேனோ ??

 

MACD  இன்டிகேடரில் கவனிக்க வேண்டிய விஷயம்::

 

நீல கோடு ஆரஞ்சு கோட்டினை தாண்டி எவ்வளவு தூரம் செல்கிறதோ அது வரையிலும் உயர்வினை காணலாம்.. அதே சமயத்தில் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் கவனியுங்கள் ..எண்ணிக்கை உயர-உயர காளைன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ..
இதே போக்கு எதிர்மாறாக அமையும் பொழுது கரடிஇன் கைகள் மேல் ஓங்கி நிற்கும் .. 

 

நீங்கள் உபயோகிக்கும் செட் அப் உடன் இதனையும் யூஸ் பண்ணுங்க.. சில காலம் முடிந்த வரை பேப்பர் டிரேடு செய்து பழகிய பின் .. சந்தையில் இறங்கவும் ..

 

இன்னொரு முக்கியமான விஷயம் ..
எனக்கு தமிழ் .. படிக்கும் காலத்தில் இருந்தே சரியா வராது.. என்னுடைய தாய்மொழி தமிழ் அல்ல.. ஆகையால் என்னுடைய பதிவுகளில் சொற்குற்றம் ஏதேனும் இருப்பின் தயவு கூர்ந்து மன்னிக்கவும் ..

 

இன்னும் சில இன்டிகேடர் பற்றியும் எழுத உள்ளேன் .. அவை இன்னமும் ஆய்வில் உள்ளது .. முடிவுகள் திருப்தி அளிக்கும் பட்சத்தில் — உடனடியாக பதிவிடுவேன்..

நன்றி !!!

நவம்பர் 4, 2008

நல்லதே நடக்கும்

Filed under: dailyposts — krvijayganesh @ 3:57 பிற்பகல்

 உங்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவினை கண்டு தினம் – தினம் வியக்கிறேன் ..
ஏதும் தெரியாமல் நுழைந்தவன் நான் ..

இன்று என்னாலும் சிறிய அளவிலாவது உதவ முடியும் எனும் மனோ தைரியத்தை அருளித்தவர் என் குரு தான் ..

 அவருக்கு என் முதற்கண் வணக்கத்தினை தெரிவித்து கொள்கிறேன்.

சந்தை தற்காலிகமாக ஏற்றம் கண்டாலும் ..

வெகு விரைவில் சரிய கூடும் என்பதே பல வித்தகர்களின் கூற்று..

 மக்கள் மனதில் பயம் இருந்தாலும் .. “சந்தை ஏறுதே இப்ப விட்டா மறுபடியும்  நிப்டி 4000 தாண்டிடும்” எனும் மனோபக்குவதில் சிலர் முதலீடு செய்கிறார்கள் .. நினைவிருக்கட்டும் நம் சந்தை இன்னமும் பாட்டம் காணவில்லை…

 இந்த ஏற்றம் தற்காலிகமானது தான் என்பதே பலரின் கருத்தும் ஆகும்.. அமெரிக்கா தேர்தல் முடிவுகள் பொறுத்து நமது சந்தையும் பெரிய ஏற்றமோ / இறக்கமோ காணக்கூடும்..    தேசிய பங்கு சந்தை(NIFTY) இல்..4000புள்ளிகள் கூட சாத்தியமாகலாம்.. அதே போல் சரிவின் உச்சகட்டமாக 1500-1600 வரைகூட போகலாம் ..

பார்ப்போம் அடுத்து என்ன தான் நடக்கிறதேன்று :) ..

நம் நண்பர்கள் சிலர் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்கள்.. கற்று கொள்வதின் முதல் அறிகுறி சந்தேகம் கேட்பது தான் .. தயங்காமல் கேளுங்கள் .. நான் என் குருவிடம் பல குழந்தைதனமான வினாக்களை எழுப்பி உள்ளேன்.. கொஞ்சம் கூட சளைக்காமல் பதில் கூறுவார்..

..மற்றவர்களுக்கு உதவும் அவரது பக்குவம் தான் என்னை இந்த தளத்தினை எழுத உதவுகிறது ..
உங்கள் சந்தேகங்களை அவ்வவ்போது தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்..
 

 மற்ற இன்டிகேடர் பற்றி கூறுவதற்கு  என்னுடைய குருவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறேன்..விரைவில் அதனை பற்றிய பதிவினை வெளிஇடுவேன் .. அது வரை சிரமம் பாராமல் காத்திருக்கவும்..
உங்கள்  ஆசிர்வாதத்தினை வேண்டி .. விடை பெறுகிறேன் .. நன்றி !!!

நவம்பர் 1, 2008

உங்களுக்காக

Filed under: dailyposts — krvijayganesh @ 8:39 மு.பகல்

வணக்கம் தோழர்களே..

இது வரை கூறிய செட் அப் வைத்து வர்த்தகம் செய்ததில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கவும் ..வரும் நாட்களில் இன்னும் சில இன்டிகேடர் நாம் உபயோகிக்கபோகிறோம் , ஆகையால் முடிந்த வரை செட்அப்களில் உங்களை பரீட்சயம் செய்து கொள்ளுங்கள்..

பல விதமான கணிப்புகளை கொண்டு டிரேடு செய்தாலும்.. சந்தை நம் கண்ணில் மண்ணை துவுவதற்கு தயாராக இருக்கும் , சூழ்நிலை எதுவாக இருப்பினும் நஷ்டடினை தடுக்கும் வித்தை தான் நம்முடைய அத்தியாவசிய தேவை .. இந்த வலைப்பூவின் நோக்கமும் அதுவே ..

LEARNING IS A CONTINUOUS PROCESS
கற்று கொள்வோம் கற்று கொடுப்போம் ..

நண்பர் ராஜ்குமார்  அவர்கள் ஆப்சன் பற்றி கேட்டிருந்தார் .. நான் அதில் இன்னமும் கத்துகுட்டி தான்.. மிக அருகில் உள்ள STRIKE PRICE களில் தின வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறேன் .. மற்றபடி POSITIONAL  டிரேடு செய்வதில்லை .. FNO பற்றிய தகவல்களுக்கு திரு. சாய் கணேஷ் அவர்களின் வலைத்தளத்தினை உபயோகித்து கொள்ளவும் ..
http://top10shares.wordpress.com

 ஒரு வகையில் அவரும் எனக்கு வழிகாட்டி தான்..  பல விஷயங்களை வெகு சாதாரணமாக எனக்கு புரிய வைத்தவர் .. கண்டிப்பாக அவருடைய தளம் உங்களுக்கும் பயன் அளிக்கும் என நம்புகிறேன்..

மற்றவை அடுத்த பதிவில் ……………

அக்டோபர் 26, 2008

தீப திருநாள்

Filed under: dailyposts — krvijayganesh @ 6:05 பிற்பகல்



நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

அக்டோபர் 23, 2008

அறிவிப்பு

Filed under: dailyposts — krvijayganesh @ 1:21 மு.பகல்

நண்பர்களின் நன்மைக்காக .. “”How To Apply Setup”" என்னும் பதிவில் சில படங்களை இணைத்துள்ளேன்.. அப்ளை செய்யும் வகையில் வரிசைபடுத்தி உள்ளது .. தேவையுள்ளவர்கள் பயனடைந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன் .. என்னுடைய இணைப்பில் உள்ள பிரச்சனை காரணமாய் .. என்னால் அதனை சரியான முறையில் “படத்திற்கு– விளக்கம் ” போன்று செய்ய முடியவில்லை.. அடுத்த முறை துல்லியமாக பதிவிட முயற்சிக்கிறேன் ..

நீங்கள் கேட்ட CAMRILLA EQUATION ரைட் சைடு BOX.NET இல் உள்ளது .. தேவையுள்ளவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளவும் ..

நன்றி !!!

அக்டோபர் 22, 2008

SET UP – 3 (EMA20 & EMA65)

Filed under: dailyposts, INDICATORS — krvijayganesh @ 1:12 மு.பகல்

இந்த முறை உங்களுக்கு சார்ட் பற்றி சொல்ல தேவை இல்லை என நினைக்கிறேன் .. கண்டிப்பாக இப்பொழுது நீங்கள் சுயமாக ரீட் பண்ண கற்றிருபீர்கள் என நம்புகிறேன் ..
அதனால் தான் வெறும் செட் அப் மட்டும் கொடுத்துளேன் ..
EMA20 & EMA65
இதற்கு முன் நாம் அப்ளை செய்தது போலவே இதையும் செய்துள்ளேன்..
மற்றபடி விளக்கம் உங்களுக்கு தேவை இருக்காது ..

நேற்றைய பதிவில் நாம் பார்த்தது போல் இன்றும் சார்ட் பாடேர்ன் (CHART PATTERN) பற்றி அலசிபோம்..

DOUBLE BOTTOM
( See ema20,65 chart)
10.10மணி கீழ் நிலையும் 10.30மணி நிலையும் கிட்டதட்ட ஒரே அளவில் இருப்பதை காண்பீர்கள் .. இவ்வாறு இரண்டு நிலைகள் அமைந்து விலை சற்று ஏறுமாயின் அது டபுள் பாட்டமாக கூறுவர்.. அந்த ஏற்றம் பெரிய உயர்வுக்கு அடிபடையாக அமையும் ..

DOUBLE TOP
(See ema20,65 chart)
அதே போல் .. 1.45மணி மேல் நிலையும் 2.05 மணி மேல் நிலையும் ஒரே அளவில் இருப்பதையும் சிறிய சரிவினால் மேலும் சரிவது தெரியும் .. இதனை டபுள் டாப் என கூறுவார்கள் ..

EMA20 & EMA65

உங்களுடைய வசதிக்காக முந்தைய இரண்டு செட் அப் சார்ட்டும் கொடுத்துளேன் ..
இது வரை கூறி உள்ள மூன்று செட்அப்களும் வைத்து ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இன்னும் தெளிவான கண்ணோட்டம் கிடைக்கும் ..

EMA34 & SMA89

EMA17 & SMA47

அக்டோபர் 21, 2008

SET UP – 2 (EMA17,SMA47)

Filed under: dailyposts, INDICATORS — krvijayganesh @ 3:00 மு.பகல்

உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..

இந்த பதிவில் நாம் அடுத்த செட்அப் பற்றி காண்போம் ..
தலைப்பிலேயே தெரிந்திருக்கும் புதுசு தான் என்று .. இருந்தாலும் எதாவது சொல்லணுமில்ல :) ..

நீங்கள் வாசிப்பது செட்அப் – 2 ( EMA 17, SMA 47)

சென்ற பதிவில் நாம் உபயோகிதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்னு கேக்கறிங்களா..

ஒவ்வொரு செட்அப்பிற்கும் பல சாதகம் இருந்ததாலும் சில பாதகங்களும் உண்டு .. அதே போல் ஒரே மாதிரியான போக்குகளும் அமைவது இல்லை ..
அதற்காக தான் இப்படி பல விதமான செட் அப் ட்ரை பண்றோம் ..

இன்னைக்கு ரொம்ப பேசுறேனோ ?? சரி சரி .. நான் விஷயதுக்கு வரேன் !!!

தேசிய பங்கு சந்தைன் ஒரு நாள் சார்ட்டில் செட் அப்-2 அப்ளை செய்துள்ளேன்..
(வழக்கம் போல் நாள் துவங்கிய போது இருந்த மனநிலை..10.30 மணிக்கு மேல் மாறுகிறது)

10.30மணி அளவில் SMA47 கோடினை பிரேக் செய்து EMA17 மேலே செல்கிறது ..
BUY சிக்னல் நமக்கு காட்டுகிறது .. இருப்பினும் ஒரு சிறிய உயர்வுக்கு பின் 40 புள்ளிகள் சந்தை சரிந்துள்ளது ..
இங்கு ஒரே ஆறுதலான விஷயம் EMA17 கோடு மேலே தான் உள்ளது.. நாம் எதிர் பார்ப்பது போல் சந்தையும் மீண்டு மேலே செல்ல தயார் ..

மீள ஆரம்பித்த சந்தை ..முதல் முறையாக.. 11.25 மணிக்கு EMA17கோடினை தொடுகிறது..
இருப்பினும் நம்முடைய EMA17 லைன் மேல் நோக்கி தான் உள்ளார் .. இன்னமும் உயர்வு வரலாம் என நமக்கு சுட்டி காட்டுகிறது ..
மீண்டும் ஒரு பயணம் மேல் நோக்கி .. இந்த முறை 12.40 மணி அளவில் EMA17 கோடினை தொடுகிறது .. பத்து நிமிடங்கள் அந்த நிலையில் தக்க வைத்தாலும், நம்மை பொறுத்த வரை.. அந்த நிலை PROFIT BOOKING செய்ய உகந்த இடமாகும் .. கிட்டதட்ட 60 புள்ளிகள் ..

இன்னொரு விஷயமும் இந்த சார்டின் மூலயமாக கூறட்டுமா ..
10.30காலை மணி முதல்( big RED CANDLE) .. கிட்டதட்ட 11.50 வரையிலும்( 3small GREEN candles before a BIG GREEN CANDLE) சார்ட்டில் வரைந்துள்ள கோடினை கவனியுங்கள் ..
REVERSE HEAD & SHOULDER PATTERN ..
இதுவும் நமக்கு + சிக்னல் தான் தருகிறது ..
(rev h&s இருந்தாலும் .., ema17 இன்டிகேடரும் நமக்கு ஒத்துலைபதால் .. + என்று கூறுகிறேன்)

நம்முடைய லாங் ….. இந்த சார்ட் பட்டேர்ன் மூலயமாக டபுள் ஸ்ட்ராங் ஆகிறது ..

ஆக இன்டிகேடர் மற்றும் சார்ட் பட்டேர்ன் .. இரண்டும் நம்முடைய ஹோல்டிங்கை பலப்படுத்துகிறது ..

இவைகளை இறந்த கால சார்ட்டில் கூறுவது எளிது.. லைவ்ஆக செய்யும் பொழுது கொஞ்சம் சிரமம் தான் .. இருப்பினும் பழக – பழக உங்களுக்கு இவை புரிவது மட்டுமில்லாமல் , போக்கினை கணிக்கும் வல்லமையும் கொடுக்கும் ..

முடிந்த வரை நன்கு பழகிய பின்னரே .. டிரேடு செய்யுங்கள் ..
மீண்டும் சந்திப்போம்.

அக்டோபர் 19, 2008

EMA34 & SMA89

Filed under: dailyposts, INDICATORS — krvijayganesh @ 6:38 பிற்பகல்

நீங்கள் கீழே காணும் சார்ட்டில் ema34, sma89 அப்ளை செய்துள்ளேன் ..
Day Trading பொருத்த வரை .. காலை முதல் முப்பது நிமிடமும்( till 10.30 AM) , அதே போல் மாலை கடைசி முப்பது நிமிடமும்(After 3PM) .. எந்தவிடமான டிரேட்களையும் செய்யாதிர்கள் ..

இனி சார்ட் பற்றி பார்ப்போம் ..
காலை துவங்கிய போது ema34 கோடு மேலேயும், sma89 கோடு கீழேயும் இருப்பதை பார்ப்பீர்கள் .. நம்முடைய செட்அப் படி இது BUY சிக்னல் தான்..
இருப்பினும் செல்லிங் பிரஷர் காரணமாய் சந்தை சரிய துவங்கியது ..

10.30மணிக்கு மேல் பார்த்தீர்களானால் SMA89கோடு மேல் நோக்கி வருவதும் EMA34கோடு கீழ் நோக்கி செல்கிறது.. ஆக வாங்குவதற்கு உகந்ததாக இருந்த சந்தை .. இப்பொழுது சரிவை காண தயாராகிறது ..
11.50மணி அளவில் ..EMA34 கோடு .. SMA89கோட்டை உடைத்து கீழே வருகிறது ..

இது தான் ஷர்ட் செல்லிங் செய்வதற்கு உகந்த தருணம் ..

இப்பொழுது 3275 புள்ளிகளில் நாம் ஷர்ட் செய்தால் .. EMA34 நம்முடைய ஸ்டாப் லாஸ் ஆகும் .. 12.30 மணி அளவில் EMA34கோட்டையும் ,12.40 மணி அளவில் SMA89கோட்டையும் — விலை கடக்கிறது.. ஆனால் சார்டினை நன்றாக பாருங்கள் .. EMA34கோடு கீழேயே தான் உள்ளது ..
இது நமக்கு இன்னும் சரிவு மீதி இருப்பதை காண்பிக்கிறது..

( ஒரு வேளை.. EMA34கோடு மேல் நோக்கி சென்று SMA89கோட்டை தாண்டி இருந்தால் நாம் அங்கு கவர் செய்திருக்க வேண்டும் )..

3275 இல் செய்த ஷர்ட் .. நாளின் முடிவு வரையிலும் .. இறங்கு முகமாகவே காணப்படுகிறது.. camrilla equation படி support level இலக்காக வைத்து உங்கள் டிரேடினை Exit பண்ணலாம்..

என்னுடைய இந்த விளக்கம்.. உங்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும் என நம்புகிறேன் ..

சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேளுங்கள் ..பின்னூட்டம் இடுங்கள்

மேலும் ..
http://paisapower.blogspot.com/ என்கிற வலைப்பூவில் திரு. சரவண குமார் அவர்கள் வருவார்கள் .. அவர் உங்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிப்பார் ..

நான் இது வரை இந்த பதிவில் கூறிஉள்ளது வெறும் 1% தான் .. இன்னமும் நிறைய பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன் ..

என்னுடைய ஓய்வு நேரங்களில் கண்டிப்பாக .. என் குரு கூறிய வித்தைகளை உங்களுக்கு கூறுகிறேன் ..

அக்டோபர் 18, 2008

How To Apply Setup

Filed under: dailyposts, INDICATORS — krvijayganesh @ 1:06 பிற்பகல்

சென்ற பதிவில் நாம் செட் அப் பற்றி பார்தோம் ..
இந்த பதிவில் சார்ட்டில் செட் அப் அப்ளை செய்வது குறித்து காண்போம்..

சார்ட் பற்றி சில குறிப்புகள் ::
லைவ் சார்ட்ஸ் quotetracker , icharts ஆகியவற்றில் கிடைக்கும் ..கீழே அதற்கான லிங்க் கொடுத்துளேன்..
மேலும் யாஹூவிலும் கிடைக்கும் ..

http://www.quotetracker.com

http://www.icharts.in

இனி QUOTETRACKER சார்ட்ஸ் பற்றி முதலில் பார்ப்போம்::

டவுன்லோடு செய்த பிறகு ..
NSE INDIA( DATA SOURCE) செலக்ட் செய்ய..

மெனு கிளிக் செய்து ..DATA SOURCES/PROXY செலக்ட் செய்யுங்கள் ..

NSE INDIAவராத பட்சத்தில் .. ஆப்ஷன் கிளிக் செய்தால் .. வெப் அப்டேட் இருக்கும் .. அதன் மூலம் உங்கள் டேடா சோர்ஸ் அப்டேட் ஆகும் ..

உங்களுக்கு தேவையான கம்பெனிகளை செலக்ட் செய்யுங்கள் ..
கம்பெனி செலக்ட் செய்யும் முறை ..


அந்த கம்பெனி பெயர்க்கு அருகில் ஒரு சிறிய சார்ட் இருக்கும் ..
அந்த சார்டினை டபுள் கிளிக் செய்யவும் ..

ஒரு புதிய சார்ட் தோன்றும் ..
புதிய சார்ட்டில் ..ரைட் கிளிக் செய்யவும் ..

டிராப் டவுன் மெனுவில் ” செலக்ட் இன்டிகேடர் ” கிளிக் செய்யுங்கள் ..
Available upper Indicators என்னும் பாக்ஸ்இல் ema, sma செலக்ட் செய்து அதனை வலது பக்கதிற்கு மாற்றவும்..

இப்பொழுது வலது பக்கம் உள்ள ema,sma இல் உள்ள edit கிளிக் செய்து .. அதில் period பாக்ஸ் இல் 34 மற்றும் sma பாக்ஸ்இல் 89 FILL பண்ணுங்கள்..

இப்பொழுது நீங்கள் செட் அப் யூஸ் பண்ண தயார் ..

குறிப்பு :: QUOTETRACKER —- மார்க்கெட் நேரங்களில் மட்டுமே அப்டேட் ஆகும்..

அடுத்த பதிவில் செட் அப் உபயோகிக்கும் முறை பற்றி கூறுகிறேன்..

அக்டோபர் 17, 2008

பங்கு சந்தை

Filed under: dailyposts — krvijayganesh @ 10:42 பிற்பகல்

நண்பர்களே ..
நமது பங்குச்சந்தை பற்றி தினமும் செய்திகளில் விமர்சனம் வருகிறது ..
அவைகளில் பணம் செய்வது ஒரு சில சூதாடிகளுக்கு மட்டுமே தெரிகிறது .. பாமரனுக்கு அது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது ..
பங்குசந்தை பொருத்தவரை நாம் அறிந்ததை விட .. நாம் அறியாமல் இழப்பது தான் அதிகம் .. இந்த வலைப்பூவை நான் எழுதுவதற்கு உந்துகோளாய் இருக்கும் எனது குரு திரு சரவண குமார் அவர்களை வணங்குகிறேன் ..

நமது பங்குசந்தை பல விதமான மக்களின் எண்ணமும் .. வெளி நாட்டு முதலீட்டின் பங்கும், நமது அரசாங்கத்தின் அங்கமும் ஆகும் ..

இதில் பணம் பண்ணுவது எப்படி என பல பேர் கூறி இருக்கலாம் .. என்னுடைய குரு கூறிய சில வழிகளை உங்களுக்கு கூறுவதில் நான் பெருமைபடுகிறேன் ..

முதலாவதாக ..
நாம் பங்கினை செலக்ட் செய்த உடன் .. அதின் காம்ரில்ல பாயிண்ட் காண வேண்டும் ..

இரண்டாவது ..
செட் அப் அப்ளை செய்து அதன் டிரெண்டு கண்டு பிடிக்கவேண்டும் ..
இதில் பல பேர் தடுமாறுகிறார்கள் .. செட் அப் என்பது நமது உயிர் மூச்சு போன்ற ஒன்று .. அதில் தான் பல உண்மைகள் நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கும் ..

நீங்கள் முதல் முறையாக செட் அப் உபயோகிப்பவர் என்றால் கீழ் காணும் செட் அப்களில் ஒன்றை உபயோகியுங்கள் ..
ema34, sma89
ema17,sma47

இவைகளை எதில் உபயோகிப்பது என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றும் ..

http://quotetracker.com

http://icharts.in

அல்லது உங்கள் புரோக்கர் உங்களுக்கு வழங்கும் சார்ட்களில் நீங்கள் உபயோகிக்கலாம் ..

இனி செட் அப் பற்றிய விளக்கம்.. இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் ..

இதில் ema34 (அல்லது) ema17 கோடு மேல் இருந்து sma89 (அல்லது) sma47 கோடு கீழே இருந்தால் அந்த பங்கின் விலை உயரும் ..
அதே போல் sma89 (அல்லது) sma47 கோடு மேல் இருந்து ema34(அல்லது)ema17 கோடு கீழே இருந்தால் அந்த பங்கின் விலை குறையும் ..

மேலும் இதில் கடை பிடிக்க வேண்டிய முக்கியமான விதி முறை பற்றி அறிந்து கொள்ளுங்கள் ..

லாங் எடுப்பவர்களுக்கு ::
ema34(அல்லது)ema17 கோடு sma89(அல்லது)sma47 கோடினை தாண்டி மேலே சென்றால் அந்த பங்கின் விலை உயரும் ..

ஒவ்வொரு முறை விலை கோடு மற்றும் ema34(அல்லது)ema17.. ஆகியவை sma89 or sma47 கோட்டிற்கு தாண்டி மேலே சென்றாலும் .. நம்முடைய அடுத்த இலக்கு காம்ரில்ல ரேசிச்டன்சே(R1,R2,R3,R4 எது அருகில் உள்ளதோ) ஆகும் ..மற்றும் ஸ்டாப் லாஸ் ema34 ema17 கோடு ஆகும் .. அதிகபடியான ஸ்டாப் லாஸ் ஆக sma89(அல்லது)sma47 வைத்து கொள்ளலாம் ..

சார்ட் எடுப்பவர்களுக்கு :: ஒவ்வொரு முறை விலை கோடு மற்றும் sma89(அல்லது)sma47 ஆகியவை.. ema34(அல்லது)ema17 கோட்டினை
உடைந்து கீழே வந்தாலும் நம்முடைய அடுத்த இலக்கு காம்ரில்ல சப்போர்ட் (S1,S2,S3,S4 எது அருகில் உள்ளதோ) ஆகும்.. மற்றும் ஸ்டாப் லாஸ் sma89(அல்லது)sma47 கோடு ஆகும் ..
அதிகபடியான ஸ்டாப் லாஸ் ஆக ema34(அல்லது)ema17 வைத்து கொள்ளலாம் ..

இவை ஒரு நாளில் பழகும் மது அல்ல .. பல மணி நேரம் இதற்காக ஒதுக்க வேண்டும் .. பல பரீட்சைகள் செய்து , நம் மனம் திருப்தி அடைந்த பிறகே முழு வீச்சில் டிரேடு செய்ய வேண்டும்..
இதில் இன்னமும் பலவற்றை கூற வேண்டி உள்ளது ..
மறு பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ..

பழைய இடுகைகள் »

Theme: Silver is the New Black. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.